Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்கட்சிகள் கடமை தவறியுள்ளது – தலைமையை வழங்க நாங்கள் தயார்

மார்ச் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டது. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக் கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்ப்பட்டுவருகின்றது.

நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடனும் முன்னிலையான செயற்ப்பாட்டை நோக்கி நகர்ந்துவருகின்றோம்.

தற்போது தமிழ்மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவுசெய்யவில்லை. தொடர்ச்சியாக பிழையான பாதையில் அந்த கட்சிகள் பயணிக்கின்றன.

கட்சிகளில் சுயநலம் குடிகொண்டுள்ளது. பொது நலம் இல்லாமல் போய்விட்டது. தமிழ்கட்சிகளுக்கு போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விட்டது.

2009 போர் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. நிச்சயமாக தமிழர் விடுதலை கூட்டணி அதற்கான இடைவெளியை நிரப்பும் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளரத்தோடங்கியதோ அன்று தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்து விட்டது. நேரடியாக தந்தை செல்வாவுடனும் ஜிஜி பொன்னம்பலத்துடனும் இருந்த ஒரே தலைவர் ஆனந்தசங்கரியே அவரே இந்த கட்சியை கட்டமைத்து வருகின்றார். பழையவர்களை நாங்கள் மறக்ககூடாது.

பழையவர்களின் கடந்தகால அனுபவங்களும் எங்களது புத்திசாலித்தனமுமே இந்த தேசத்திற்கு விடுதலையை பெற்றுத்தரும்.

எனவே எங்களை தமிழ் மக்கள் நம்புங்கள். இளைஞர்கள் எங்களுடன் இணையுங்கள். என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கட்சியின் வன்னிமாவட்ட கிளையின் தலைவர் உதயன், செயலாளர் திவா,இளைஞரணி செயலாளர் பத்மகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை கூட்டணியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

முந்தைய செய்தி நாக விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழு
அடுத்த செய்தி மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டு மாநகரசபை அமர்வில் நன்றி தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

ஜனவரி 8, 2026
இலங்கைமுதன்மை செய்தி

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விசேட ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது ….

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல்

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?