Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகப் பகுதியில், புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச சபையின் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(15.10.2026) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சங்கானை, கோப்பாய், தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தலா ஒன்று என்ற அடிப்படையில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட காங்கேசதுறை பகுதியில் கொடுக்கப்பட்ட மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய்யக் கோரி தெல்லிப்பழை சந்தியில் கடந்த வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குப் பேரணியாகச் சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சங்கானை பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யுமாறு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு, சங்கானை பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (12.10.2026) கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெல்லியடி பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதியினை இரத்து செய்யக் கோரி மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்திற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச சபை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
அடுத்த செய்தி மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இரு வேறு குற்றச்சாட்டில் கைதான நால்வர்

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

ஜனவரி 1, 2026
இலங்கை

இனபேதமின்மை என்ற கோசத்தை முன்வைத்து சமஸ்டியை மறைக்க முடியாது

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சரித்த ரத்வத்தே பிணையில் விடுவிப்பு!

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?