ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை நடத்தினார்.
அதன் பின்னர் யாழ் நகரில் உள்ள ரிக்கோ தனியார் விடுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட அமரர் டி.எஸ்.சேனநாயக்க அரசியல் பீட செயல் அமர்வை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
