இலங்கையில் கடும் வெப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இதன்படி வடமத்திய ,வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்த்தோட்டை மாவட்டங்களிலும் அதீத வெப்பம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் மக்கள் விழிப்புடன் செயற்பட்டால், பாதிப்புக்களை குறைத்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
