இந்திய பெருங்கடலில், ஈரானின் போர் கப்பல், நீர் மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஷெத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், போர்க் கப்பல் ஒன்றை நீரில் மூழ்கிக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடித்த முதலாவது சந்தரப்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை கடல் எல்லைக்கு அப்பால், நீரில் மூழ்கும் சந்தரப்பத்தில் குறித்த கப்பலில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டு கராப்பட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
