நாட்டில் சகல சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (Tax Identification Number) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிதி நிறுவளத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல், காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல், கார் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல், கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல் போன்றவற்றுக்கு வரிச் செலுத்தும் அடையாளம் இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே இச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
