Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி அமைக்கும் செயற்பாடு

பிப்ரவரி 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைப்புக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பபைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல்காணிகளையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின் குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகாவலி அதிகாரசபைதொடர்பில் குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இத்தகையசூழலில் 23.02.2026 இன்று கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பு பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறிப்பாக கோட்டைக்கேணியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதயைும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கமக்கார அமைப்பினால் தமக்கு கோரிக்கை கடிதம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், இவ்விடயங்கள் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவுந் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். புகையிரத விபத்து – ஆலய குருக்கள் உயிரிழப்பு!

ஜூலை 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிர்க்கதியான மூவரை பத்திரமாக மீட்ட விமானப்படை

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் கட்டப்படும் விகாரை !தடுக்க சென்றவர்கள் மீது அச்சுறுத்தல்!

நவம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?