Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியை கடுமையாக சாடியுள்ள நல்லூர் தவிசாளர்

பிப்ரவரி 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறியவர்கள், தற்போது, நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என்று கூறிவருகின்றனர்.

அதற்கு நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றமை கவலைக்குரியது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும், தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்று அண்மையில் நல்லூர் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கடுமையான எதிர்பிற்கு மத்தியில் தீர்மானம் ஒன்றினை இயற்றியமை தெரிந்த விடயம்

குறித்த தீர்மானத்தின் மூலம் அரசு புதிய சட்டத்தினை கொண்டுவராமல் விடப்போவதும் இல்லை அதே நேரம் பயங்கரவாதச் சட்டத்தினை நீக்கப்போவதுமில்லை. ஆனால் மக்களினை குரல்வளையை நசுக்குகின்ற இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக எமது மக்கள் சார்பில் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது எமக்கான கடமை.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரசார மேடைகளிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது அச் சட்டத்தினை விட கொடுமையான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை கொண்டு வருகின்றார்கள்.

இச் சட்டமூலம் பயங்காரவாத சட்டத்தினை விடக் கொடுமையானது என்பது நன்கு கற்றறிந்த சட்டத்தரணிகள் மற்று கல்விபுலன் சார்ந்தோர், ஆய்வாளர்களால் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்ட கருத்தரங்குகளில் மூலம் வெளிக்கொணரப்பட்டது.

அதை விட குறித்த சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் கவலை வெளியிட்டதுடன் ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தனர். என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறிய இவ் அரசாங்கத்தினைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் அன்றைய சபை அமர்வின் போது நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என்று கூறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தாங்கள் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் ஒரு கதையும் பின்னர் மறு கதையும் கதைப்பது தொடர்ச்சியாக இந் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஒரு சம்பவம்.

அந்தவகையில் நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை எமது மக்களை ஒடுக்கும் முகமாக கொண்டு வருகின்ற இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி மன்னாரில் பல டொன் பழுதடைந்த சோள விதைகள்
அடுத்த செய்தி நாகர்கோவிலில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்.மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மார்ச் 12, 2026
இலங்கை

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு சிரமதானப்பணி முன்னெடுப்பு!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!(Video )

ஜூலை 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?