Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வலி.வடக்கில் காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன் விடுவிக்க நடவடிக்கை

பிப்ரவரி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டு ள்ளோம்.

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடியகவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும், நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி
அடுத்த செய்தி அநுர அரசாங்கத்தை சாடிய நாமல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பம்!

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொஸ்பேற்று விற்பனை – ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

செப்டம்பர் 1, 2025
இலங்கை

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?