ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சித்து ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுவான பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக் கொண்ட போதே இவர் பல விடயங்கள் பற்றி பேசியுள்ளார்.
நாட்டில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கின்றது. அரசாங்கம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிறுத்திவிட்டதாக கூறினாலும் அவை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
அண்மையில் சட்டத்தரணிகள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இது தொடர்ந்தால் பொதுமக்கள் எவ்வாறும் அச்சமின்றி வெளியில் செல்வார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.
