நாட்டில் டிட்வா புயலின் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் புத்தளம் மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள், நாளை (16) முதல் புத்தளம் ரயில் நிலையம் வரை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி புத்தளம் ரயில் பாதை முழுமையாகத் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை ரயில்கள் இயக்கப்படும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
