Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் – பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஜனவரி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை முற்றாக வெளியேறியுள்ளனர்.

காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர்.

குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான “கொல்களம்” இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில்,

குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது. அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு , அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி காரைநகரில் துரித கெதியில் புனரமைக்கப்படும் வீதிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசு கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

பிப்ரவரி 6, 2026
இலங்கை

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?