காலி நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவியில் தற்போது பணியாற்றும் டப்ளிவ்.ஏ.தர்மசிறி எதிர்வரும் 25ஆம் திகதியுடன் ஓய்வுபெறுகின்றார்.
இதன்படி அவரின் வெற்றிடத்திற்கு கே.யூ.சந்திரலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தென்மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கலாச்சார மற்றும் கலைகள் விவகார,சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள், மகளிர் விவகார மற்றும் பொருளாதார மேம்பாடு, வீடமைப்பு மற்றும் கட்டுமானம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
