நாட்டில் முட்டைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
