நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நுவரெலியாவில் 8.0 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பண்டாரவளையில் 11.6 பாகை செல்சியசாக குறைந்தபட்ச வெப்பநிலையும், பதுளையில் 14.4 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
வடமத்திய மாகாணத்தில், பொலன்னறுவையில் 19.4 பாகை செல்சியசாக குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் இன்று காலை 5.30க்கு வெளியிடப்பட்ட முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
