மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்
.
திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான் இறைச்சி உட்பட வேன் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
