நாட்டில் கடந்த நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பான ஒரு அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி மேல், தென், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி 3ஆம் தவணையின் இரண்டாம் பகுதிக்காக மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ அறிவித்துள்ளார்.
