Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஊர்காவற்துறையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது

டிசம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாகின்றது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசாளர் அன்னராசா தலைமையில்இடம்பெற்றது.

இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

அதன் போது, மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.

பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

பாதீட்டுக்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்களும் , தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினருமாக 08 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 03 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒரு உறுப்பினரும், தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினருமாக 05 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

முந்தைய செய்தி எமில்நகர் கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கிய தென் பகுதி வர்த்தகர்கள்
அடுத்த செய்தி அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க CIDக்கு அழைப்பு!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாதிவெல பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மே 9, 2026
இலங்கை

யுவதி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக இணையத்தில் பரப்பிய பெண் ஒருவர் கைது!

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?