இந்தியா முழுவதும் இண்டிகோ எயார்லைன்ஸ் விமான சேவை 4ஆவது நாளாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 400 இண்டிகோ எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 62 இண்டிகோ விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்களை இயக்குவதற்கு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது.
விமானங்கள் இரத்து செய்யப்பட்டது பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
