ஒட்டாவா நகர மேயர் மார்க் சட்கிளிஃப் (Mark Sutcliffe) வெளியிட்டுள்ள பொதுப் பாதுகாப்பு செயல் திட்டம், விமர்சனங்களையும் கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது.
மேயர் சட்கிளிஃப், காவல்துறை, தீயணைப்பு மற்றும் துணை மருத்துவர் சேவைத் தலைவர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை வெளியிட்டார்.
“ஒட்டாவாவை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதே” இத்திட்டத்தின் நோக்கம் அவர் அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களுக்கு புதிய சுவாசக் கருவிகள் வாங்குவதற்கான நிதி, அடுத்த ஆண்டுக்கான ஒட்டாவா நகரத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், மேயர் சட்கிளிஃப் அறிவித்துள்ளார்.
இதேவேளை, அவரது எதிர்ப்பாளர்கள் இந்த நிகழ்வை, ஏற்கனவே உள்ள வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை மீண்டும் தொகுத்து அளிக்கும் ஒரு “மக்கள் தொடர்பு தந்திரம்” என்று முத்திரை குத்தியுள்ளனர்.
