இலங்கையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக்(SLPL) T20 போட்டி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறாவது தொடருக்கான புதிய திகதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 2025 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரிமியர் லீக்கின் ஆறாவது தொடர் 2026 ஜூலை 8ம் திகதி முதல் ஓகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பெப்ரவரி-மார்ச் 2026 இல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் 2026 போட்டிகளை நடத்துவதற்கான இடங்களை முன்கூட்டியே தயார் செய்வதற்குரிய தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
