Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 43 பேர் HIV தொற்றால் பாதிப்பு – வைத்தியர் சந்திரகுமார்(Video)

டிசம்பர் 2, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் இதுவரை 43 பேர் எச்ஐவி நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளதுடன் ,இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.

எச்ஐவி எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் 2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.

ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும்.

எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது.

இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர்.

அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். என்றார்.

முந்தைய செய்தி “வா வாத்தியார்” படத்தின் 3 வைத்து பாடல் வெளியானது
அடுத்த செய்தி முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்

டிசம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆகஸ்ட் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் கன மழையால் மக்கள் இயல்பு நிலை பாதிப்பு!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவு தொடர்பில் கலந்துரையாடல் ……

மார்ச் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?