வியட்நாமில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 52 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களில் 13 பேரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 32 இலட்சம் கால்நடைகள் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்டடங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் வெள்ளத்தில் சேதமாகியுள்ளதால் அரசுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
