பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இதன்படி எவ்வாறாயினும் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
