வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள கிதுல்கோட்டை பகுதியில் இன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ், வேன், கார் என மூன்று வாகனங்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. என்பது குறிப்பிட தக்கது.
விபத்து குறித்து தனமல்வில பொலிஸ்ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
