Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை சமனாக நடத்தினால் கட்சிகள் தேவையில்லை – சத்தியலிங்கம்

ஏப்ரல் 26, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மூவின மக்களும் இந்த நாட்டில் எப்போது சமமாக மதிக்கப்படுகின்றார்களோ அன்று தான் தமிழ்கட்சி சிங்களகட்சி, முஸ்லீம் கட்சி என்ற தேவை இருக்காது. அந்த நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

மோகம் 30 நாள் என்று சொல்வார்கள். அந்த மோகத்தில் வந்த ஒரு கட்சி தாங்கள்தான் தமிழ்மக்கள், முஸ்லீம் மக்களுடைய ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்று சொல்கிறார்கள். ஒரு தேர்தலில் வென்றுவிட்டு அப்படி சொல்லமுடியாது. இந்த தேர்தல் முறையால் மாத்திரமே அவர்கள் வென்றார்களே தவிர ஒட்டுமொத்த தமிழ்மக்களின் மனங்களை கவர்ந்து வெல்லவில்லை.

இந்த நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்ப்படவேண்டும் என்று இலங்கை மக்கள் விரும்பினார்கள். இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டவர்கள் நாட்டின் தேசிய வளங்களை பயன்படுத்தி நாட்டு மக்களை பிச்சைக்காரர் ஆக்கினார்கள் எனவே மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பி இந்த அரசை கொண்டு வந்தார்கள். அந்த மாற்றத்தை நாங்களும் எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாடானது ஊழற்ற சிறந்த நிர்வாகத்தை கொண்ட கொள்ளையடிக்காதவர்களை கொண்ட ஒரு அரசாக இருக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அவா. அந்த விருப்பம் எமக்கும் இருக்கிறது. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது. நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கிறோம்.

தமிழ்மக்களின் பிரச்சனை நீண்டகால பிரச்சனை
எனவே தமிழ்தேசிய பிரச்சனையை தீர்க்க யார் முன்வருகின்றார்களோ அவர்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்த அரசு தெரிவுசெய்யப்பட்ட ஆறுமாதத்திலேயே அவர்களது பயணம் வித்தியாசமாக இருக்கிறது.

மூவின மக்களும் இந்த நாட்டில் எப்போது சமமாக மதிக்கப்படுகின்றார்களோ அன்று தமிழ்கட்சி சிங்களகட்சி, முஸ்லீம் கட்சி என்ற தேவை இருக்காது. அந்த நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதனை நம்பியே மக்கள் வாக்களித்தனர் எனவே குறுகிய நோக்கத்திற்காக மக்களை நீங்கள் ஏமாற்றினால் இந்த நாடு ஒருநாளும் மீட்சியடையாது.

ஆணையிறவு உப்பில் ருசியைத் தான் பார்க்க வேண்டும் பெயரையல்ல என்று அமைச்சர் பிமல் அண்மையில் கூறினார். அவர் கூறுவது உண்மை தான். ஆனால் தெற்கில் உங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள். ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, அந்த வன்ச, இந்த வன்ச என பெயரை வைக்கிறீர்கள்.

சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு பிள்ளைகள் தானே வேண்டும். பெயர் முக்கியமில்லை தானே. அதற்கு பிறகு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசரின் அஞ்சலி நிகழ்வு
அடுத்த செய்தி வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ். நகர் பகுதியில் இறைச்சிக்கு தட்டுப்பாடு

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

டிசம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் உத்தேச காற்றாலை மின்சாரத் திட்டம் இடை நிறுத்தம்!

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் 3000 எரிவாயு அடுப்புகளை பறிமுதல்!

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?