கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் தெஹிவளை தேசிய மிருகசாட்சி சாலையில் பிறந்த இரண்டு சிங்க குட்டிகளுக்கு பெயர்கள் வைக்க நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு சிங்க குட்டிகளுக்கான பெயர்களை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மிருககாட்சிசாலைக்கு வரும் பொதுமக்கள், பிறந்த ஆண் மற்றும் பெண் சிங்கத்திற்கு பெயர்களை எழுதி பெட்டியொன்றில் போடலாம் என்றும் குலுக்கல் முறையில் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது அந்த குட்டிகள் ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக மிருககாட்சிசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


