2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 வயதான அவர் இதுவரை தேசிய மற்றும் கழகங்களுக்காக 953 கோல்களை அடித்துள்ளார்.
தற்போது, சவுதி அரேபியாவில் அல்-நாசர் கழகத்திற்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை, 143 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை, ரொனால்டோவின் ஆறாவது உலகக் கிண்ண தொடர் என கூறப்படுவதுடன் கடந்த வாரம் விரைவில் ஓய்வு பெருவதாக ஊடக மாநாட்டில் அறிவித்த ரொனால்டோ, அடுத்த இரண்டு ஆண்டுகள் விளையாடவுள்ளதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
.அத்துடன்,1000ம் கோல்கள் என்ற தனது இலக்கை நோக்கியும் அவர் விளையாடி வருகின்றார்.
