தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் ஹாங்கி என்று பெயரிடப்பட்ட பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பாலாத்தின் ஒருபகுதியானது திடீரென இடிந்து விழுந்துள்ளது. மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

