பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை
மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


