Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அக்டோபர் 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும் அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும்.

அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகள் குறித்த பயிற்சித் திட்டம், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டு வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகால், கிளிநொச்சியிலுள்ள பயிற்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (23.10.2025) இடம்பெற்றது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சனின் வரவேற்புரையைத் தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வௌ;வேறு விடயப் பரப்புக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன. அவர்களை வலுப்படுத்துவதன் ஊடாகவே எமது மாகாணத்தின் அடிமட்ட அலகான உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும்.

மத்திய அரசாங்கத்தின் கீழான மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் என்பன எவ்வாறு சுறுசுறுப்பாக விரைந்து மக்களின் தேவைகளைத் தீர்க்கின்றனவோ அதைப்போல, மாகாண அலகின் அலுவலகங்களும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். அதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ தவிசாளர்களான நீங்கள்தான் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.

அதேநேரம் எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் சிறப்பாகச் செயற்படும் உள்ளூராட்சி மன்றங்களை கௌரவிக்கவேண்டும். இதன் ஊடாக சிறப்பாகச் செயற்படுபவர்களை நாங்கள் ஊக்குவிக்கலாம். அத்துடன் தவிசாளர்களும், செயலாளர்களும் மக்களுக்கு சேவையாற்றத்தான் வந்தவர்கள். அதை மாத்திரம் மனதிலிருத்தி செயற்பட்டால் மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் சமன் டிஸாநாயக்க, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி யாழில். கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் கடலில் உயிரிழப்பு
அடுத்த செய்தி புதுக்குடியிருப்பு மந்துவில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் மீட்பு!

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

சுவையான மசாலா முட்டை பஜ்ஜி செய்யலாம் வாங்க

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 2, 2025
இலங்கை

தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறைத்தண்டனையும் 40 இலட்ச ரூபாய் தண்டமும்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?