நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மழைக்கால வானிலை காரணமாக டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஆண்டில் 40ஆயிரத்து 392 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மழை காலம் நெருங்கி விட்டதால் , டெங்கு கொசுக்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்தார்.
