Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப் கல்வியன்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை மாற்ற தீர்மானம்

அக்டோபர் 11, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கல்வியன்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என மாற்றம் செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை அபிவிருத்தி சங்க விசேட கூட்டமும் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பெயரை மாற்றுவது குறித்து ஜே – 112 கிராம சேவையாளர் பிரிவின் முதியோர் நலன்புரி சங்கத்தினால் , கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதுடன் , அதன் பிறந்து வடமாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பாடசாலை பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது,

குறித்த பாடசாலை ஆனது 1930ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப பெயர் அறிய முடியாத நிலையில் 1962ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பாடசாலை சுவீகரிக்கப்பட்டதன் பின்னர், எமது அயல் ஊரான கல்வியன்காடு பெயருடன் பாடசாலை பெயர் அமையப்பெற்றதாக கூறப்படுகிறது.

எமது பாடசாலை அமைந்துள்ள காணி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில். காணியின் உறுதியில் நல்லூர் கோவில்பற்று , நல்லூர் இறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுதிகளில் இறை என குறிப்பிடப்பட்டுவது அந்த காணி அமைந்துள்ள ஊரின் அல்லது கிராமத்தின் பெயரே. அதன் அடிப்படையில் பாடசாலை அமைந்துள்ளது நல்லூர் கிராமத்தில், அத்துடன் இந்த காணியின் அமைவிடம் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்டது.

கல்வியன்காடு என்பது எமது அயல் கிராமம். அந்த கிராமம் வலி. கிழக்கு பிரதேச சபையின் கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.

எமது பாடசாலை நல்லூர் பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருக்கும் போது, பாடசாலையின் பெயரின் முன்பாக கல்வியன்காடு என எமது அயல் ஊரின் பெயர் காணப்படுவதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எமது பாடசாலையின் பெயரை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி ரயிலில் மோதி யானை உயிரிழப்பு
அடுத்த செய்தி யாழில் தனியார் காணியை தம் வசப்படுத்திய கடற்படை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வெலிகம சஹான் கைது

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். இரத்த வங்கிக்கு குருதி வழங்கிய 185 இராணுவத்தினர்

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?