Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடு

அக்டோபர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 14 வயதுடைய மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயின் 2 ஆவது கணவர் மற்றும் தனியார் விடுதி ஒன்றின் முகாமையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவர் குறித்த பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் குறித்த மாணவியின் தாயின் 2 ஆவது கணவர் என குறிப்பிடப்படும் நபர் குறித்த மாணவியை பாடசாலை மாணவர் விடுதிக்கு சென்று நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த நபர் குறித்த மாணவியை தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று குறித்த சிறுமியின் தந்தை என கூறி அறை ஒன்றை பெற்று தங்கிய நிலையில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்தவற்றை பாடசாலை விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் குறித்த சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் மற்றும் விடுதியின் முகாமையாளர் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மன்னார் நகரில் பல்வேறு தனியார் தங்கு மிட விடுதிகள் காணப்படுகின்றது. குறித்த விடுதிகள் எவ்வித கண்காணிப்புகளும் இன்றி காணப்படுகிறது.

இவ் விடுதிகளில் 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகள் அழைத்துச் செல்லப்படுகின்ற நிலையில் விடுதியின் முகாமையாளர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தங்குவதற்காக அனுமதிப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உள்ள விடுதிகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முந்தைய செய்தி பழுதடைந்த அரச பேருந்து – வடமராட்சி கிழக்கு மக்கள் அசௌகரியம்
அடுத்த செய்தி உள நல நாளினை முன்னிட்டு குடும்ப உறவுகளுக்கான விளையாட்டு நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை

ஜனவரி 30, 2026
இலங்கை

அக்குரேகொட துப்பாக்கிசூடு – மேலும் ஒருவர் கைது

பிப்ரவரி 17, 2026
இலங்கை

யாழில் ஆயுதங்கள் மீட்பு

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம் ….

மார்ச் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?