Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க ஆலோசனை

ஏப்ரல் 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அதன் போதே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கூட்டமானது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சுழற்சியை மேம்படுத்துவதற்காக அரச, தனியார், நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக  காணப்பட்டது.
 குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது மாகாணத்தின் வணிகச் சூழலை ஆரோக்கியமானதாக்குவதற்குத் தடையாக உள்ள பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

மாகாணத்தின் வளங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்பான தரவுகள் சேகரிப்பு முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

வங்கித்துறையினருக்கும் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கும் இடையில் இடைவெளி காணப்படுவதால், முயற்சியாளர்கள் நிதியுதவிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

மாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

மாகாணத்தின் வர்த்தகம், வளங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் தொடர்பான தரவுகளை முறையாகச் சேகரித்து ஒழுங்கமைப்பதற்கான குழு.

வடக்கு மாகாணத்திலிருந்து எந்தெந்தத் துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் குழு.

தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலால் வடக்கு மாகாணத்திலுள்ள தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்களை முன்கூட்டியே ஆராய்ந்து, அவற்றைத் தணிப்பதற்கான உத்திகளை வகுக்கும் குழு.

இந்தக் கூட்டத்தில் மாகாண அரச உயர்மட்ட அதிகாரிகள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு வடக்கு மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முந்தைய செய்தி அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
அடுத்த செய்தி வனத்துறையின் அரச வாகனம் முறைகேடாக பயன்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உண்ணாவிரத போராட்டம்

செப்டம்பர் 25, 2025
இலங்கை

நாக விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழு

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது – சந்தன பண்டார

மார்ச் 30, 2026
இலங்கை

மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல்

ஜனவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?