Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பழுதடைந்த அரச பேருந்து – வடமராட்சி கிழக்கு மக்கள் அசௌகரியம்

அக்டோபர் 4, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

நேற்று அதிகாலை கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது.

பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்தானது மீண்டும் இடை நடுவே பழுதடைந்து காணப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது.

மீண்டும் அதே பேருந்து கோவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது

அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்தது. இதனால் குடாரப்பு தொடக்கம் கோவில் வரை செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது 750. வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்க்கான சேவையிலீடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஒருங்கிணைப்பு தலைவருமான திரு.றஜீவன் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி குறிகட்டுவான் இறங்குதுறை வீதிப் புனரமைப்பு நிகழ்வு
அடுத்த செய்தி மன்னாரில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

புதிய கல்வி சீரமைப்பின் ஊடாக புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம் – பா.உறுப்பினர் கந்தசாமி பிரபு

பிப்ரவரி 1, 2026
இலங்கை

நச்சு மருந்து தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்.

செப்டம்பர் 15, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 202 ஓட்டங்களால் முன்னிலை

செப்டம்பர் 20, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?