Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அக்டோபர் 2, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை இன்று வியாழக்கிழமை (2) மாணவர்கள் பாடசாலை முன் கதவை பூட்டி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் எவரும் உட்செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டு க்கு கல்வி கற்று வந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட அதேவேளை அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாது இருந்து வருகின்றதுடன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றது.

இது தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை ஒரு தீர்வும் இல்லை.

இந்த நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர்.

இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை எனவே எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரைக்கும் பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 7.00 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த போராட்ட இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்து உணவு வழங்கி வரும் பெண் ஒருவர் தான் கடந்த 7 வருடங்களாக அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதாகவும் குறித்த அதிபர் என்னிடம் ஒரு மாணவருக்கு 5 ரூபா வீதம் மாதம் 15 ஆயிரம் ரூபா தருமாறு கோரி நான் 35 ஆயிரம் ரூபா கொடுத்தேன்.

அதற்கு நன்கொடை என ஒரு பற்று சீட்டில் எனது பெயரும் மற்ற பற்றுச்சீட்டு எனது சகோதரியின் பெயர் இட்டு தந்துள்ளார்.

கடந்த 5ம் மாதம் 10ம் 11 ம் ஆண்டு மாணவர்களுக்கு 62 ஆயிரம் ரூபா பணத்தை ஒரு ஆசிரியருக்கும் தெரியாமல் தருமாறு கேரிய நிலையில் அதனை அவரிடம் கொண்டு சென்று கொடுக்கும் போது அதிபர் என்னிடம் யாருடம் பறையடித்தனி என கேட்டு பணத்தை பெற்றுக் கொண்டார்.

அது எனக்கு மிகவும் கவலை என தெரிவித்ததையடுத்து உடனடியாக சம்மந்தப்பட்ட வலயக்கல்வி பணிப்பாளரின் கதைப்பதுடன் இங்கு நடந்துள்ளவை தொடர்பாக குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்வதாகும் அதன் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்ட காரர்களுக்கு உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி சென்று மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கிருந்து பதில் வரும் வரை அவர் இன்று தொடக்கம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக அங்கு மாற்றுவதாகவும் உத்தரவாதம் அளித்ததையடுத்து பகல் 12.00 மணிக்கு மாணவர்கள் கதவை திறந்து உட்செல்ல அனுமதித்தனர்

இதையடுத்து கல்வி பணிப்பாளர் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டு பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையா வண்ணம், அதிபரை தற்காலிகமா குறித்த பாடசாலையிலிருந்து வலயக் கல்வி அலுவலகத்திற்கு மாற்றியதுடன், குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரை, பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படுவரை பொறுப்பாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டதுடன் நாளை முதல் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் வழமை போல நடக்கும் என முடிவு எட்டப்பட்டது.

முந்தைய செய்தி போராட்டத்திற்கு பணம் கொடுத்து வரவழைக்கக்கப்பட்ட இளைஞர்கள்
அடுத்த செய்தி யாழில் மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது தொடர்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை!

ஆகஸ்ட் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது! 

ஏப்ரல் 1, 2026
இலங்கை

வலையில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்க நடவடிக்கை!

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி காணி உரிமையாளர்களிடம் பொலிஸ் கெடுபிடி.

ஏப்ரல் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?