Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும்- பிரதமர்!

செப்டம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்வித் துறையில் இடமாற்றங்களை நிராகரிப்பது நீண்ட காலமாக நிலவும் நடைமுறையாக உள்ளது என்றும், இது இடமாற்றங்களுக்கு இணங்காத பொதுச் சேவையில் உள்ள ஒரே துறை. இத்தகைய இடமாற்றங்களுக்கு இணங்கத் தவறிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பது தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துத் துறைகளுக்கும் ஒரு ஒதுக்கீட்டு முறைமையின் (quota system) அடிப்படையில் இந்தக் கொள்கை செயற்படுத்தப்படுவதுடன், இயலாமையுடைய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையிலான மாவட்ட ஒதுக்கீட்டு முறைமையின் (merit-based district quota system) மூலமாகவும் அனைத்துத் துறைகளுக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் கல்வி தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் கைது!
அடுத்த செய்தி காதலை நிராகரித்ததால் மாணவன் செய்த செயல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் . ஊடக அமையத்தின் விருது வழங்கும் நிகழ்வு(Video)

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

மே 25, 2026
இலங்கை

கிளிநொச்சியில் விவசாயிகளின் பயிர்கள் பாதிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிபா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

ஜனவரி 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?