முதன்முறையாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு போட்டிகள் முடிந்து, சூப்பா் 4 சுற்று போட்டிகளும் முடிந்த நிலையில், முதலிரண்டு அணிகளான நடப்பு சம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஆசியக் கிண்ண வரலாற்றிலேயே இறுதி போட்டியில் இந்தியாவும்-பாகிஸ்தானும் முதன்முறையாக மோதுவது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பின்னணியில் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை டுபாய் சா்வதேச மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது.
இலங்கைக்கு எதிரான சூப்பா் 4 சுற்றில் இந்தியா கடும் திணறலுக்குபின் தான் வெல்ல முடிந்தது.
இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ் நம்பிக்கை தருகிறாா்.
மேலும் ஹாா்திக் பாண்டியா, ஓபனா் அபிஷேக் சா்மா போட்டியின் இடையிலேயே அசௌகரியம் காரணமாக வெளியேறினா். ஆனால் இறுதி போட்டியின் அவா்கள் விளையாடுவா்கள் என பயிற்சியாளா் மொா்க்கல் கூறியுள்ளாா்.
இந்த போட்டி தொடர்பில் பாக். அணி தலைவர் கூறுகையில்
இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் யாரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணி. இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம். இந்தியா உட்பட எந்த அணியையும் வெல்லும் குணம் எங்களது அணிக்கு உள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அணி தனது பந்துவீச்சு யூனிட் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோா் இந்தியா துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவா்.
கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில்இந்தியா 4-இலும், பாக். 1 வெற்றியை பெற்றுள்ளன. சம்பியன் பட்டத்தை இந்தியா தக்க வைக்குமா அல்லது பாகிஸ்தான் வசப்படுத்துமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
