Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜப்பானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

செப்டம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்

அங்கு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமதா (Akio ISOMATA), ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ள “எக்ஸ்போ 2025” இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது விஜயத்தின்போது ஜப்பான் பேரரசர் நருஹிட்டோவை சந்திக்க உள்ளதுடன், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். மேலும், இலங்கை மற்றும் ஜப்பான் வர்த்தக சபைகள் இணைந்து டோக்கியோவில் ஏற்பாடு செய்துள்ள இலங்கை முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி நானுஓயா புகையிரத நிலையத்தில் சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள்!
அடுத்த செய்தி கோப் குழுவினால் பல புதிய தீர்மானங்கள் எடுக்க நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற கார்- இருவர் உயிரிழப்பு!

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி பகுதியில் இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தற்போதும் சீரற்ற காலநிலை – 310 பேர் நிலை என்ன?

நவம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?