நேபாளத்தில் சமூக வலைதள முடக்கம் காரணமாக அண்மையில் நடத்தப்பட்ட திடீர் போராட்டமானது வன்முறையாக வெடித்தது. இதன்போது பாராளுமன்றக் கட்டிடம் தீ வைக்கப்பட்டது. பலர் உயிரிழந்தனர்.
நாட்டின் தலைவர்கள் பதவியை இராஜினாமா செய்தார்கள்.இதனால் நேபாள பிரதமராக சுஷிலா கார்கி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நடந்து முடிந்த போராட்டத்தில் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கூறியிருப்பதாவது,
“சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யவும், மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளோம்.
போராட்டத்தின்போது உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
