கல்கிசை நீதிபதியை மாற்றியமை தொடர்பாக இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தலைமையில் கடும் விவாதம் இடம்பெற்றது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான வழக்கின் சாரங்களை, விசாரணை முடிவதற்கு முன்பே சட்டமா அதிபருக்கு அனுப்பியதற்காக, கொழும்பு மோசடிப் பணியகத்தின் அதிகாரிகளை கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கண்டித்தமையை தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர பேசும் போது அது சர்ச்சையாக மாறியிருந்தது.
இதன்போது, கூறிய விடயத்தை மாற்றி மாற்றி கூறியமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜேயசேகரவை கொக்கரிக்காமல் சரியாக பதிலை கூறுமாறு அமைச்சர் நளிந்த கேட்டுக்கொண்டார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா இருக்கின்றது என ஒப்புக்கொள்ளுங்கள் நானும் கூறியதை ஒப்புக்கொள்வதை பற்றி யோசிக்கலாம் என அவர் தனது சூடான கருத்துக்களை சபையில் தெரிவித்தார்.


