ஆடைகள் எதுவும் இன்றி சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மொரட்டுவ, ஈகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதரயிலுள்ள ஜெயகத்புர கடற்கரையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈகொட உயன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரின் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் 50-60 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
