Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்.

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் இன்று (29.01.2025) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு நேரடியாகச்சென்று வைத்தியசேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியருடன் கலந்துரையாடியதுடன், வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

மருத்துவத்தேவைப்பாடுகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்ட பிராந்தியசுகாதாரசேவைகள் பணிப்பாளர் இந்த தேவைப்பாடுகள் தொடர்பாக என்னிடம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கின்றார்.

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை மாத்திரமல்லாது, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த தேவைப்பாடுகள்தொடர்பில் ஏற்கனவே எம்மால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன் இன்று முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியர்கள் எவருமில்லை என, வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வருகைதந்த பொதுமக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

அத்தோடு வைத்திய சேவைகளைப்பெறுவதற்கு வந்த பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் என்னிடம் முறையிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இதுதொடர்பில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இதுகுறித்து தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தேன். இந்நிலையில் தாம் உடனடியாகப் பிறிதொரு வைத்தியரை கடமையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு ஆதாரவைத்தியசாலைக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிட்டிருந்தேன். இங்கு பிறிதொருவைத்தியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வைத்திய சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிந்தது.

இங்கு நிலவும் மருத்துவத் தேவைகள், வைத்திய ஆளணிப் பற்றாக்குறைகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் – என்றார்

முந்தைய செய்தி கடவுளின் சிலையில் இருந்து இடை விடாமல் கசியும் நீர் – இரவிலும் குவியும் மக்கள்!
அடுத்த செய்தி மாவை சேனாதிராஜா காலமானார்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

கிளிநொச்சி சேவைச்சந்தை முழுகதவடைப்பு

மார்ச் 11, 2025
இலங்கை

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இலங்கைக்கு வருகை!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். எரியுண்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

மே 1, 2026
இலங்கை

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள்

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?