Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorized

மன்னார் வளைகுடாவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

செப்டம்பர் 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டொல்பின் உள்ளிட்டவகையில் சிக்குகிறது.

அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடு கின்றனர்.

இந் நிலையில் இன்று காலை சேதுக்கரை தெற்கு மன்னா் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பெண் கடல் பசு எனவும் அது சுமார் 300 கிலோ எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா அல்லது உடல் நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என கீழக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.

 

முந்தைய செய்தி மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – அரசாங்கம் அறிவிப்பு!
அடுத்த செய்தி திலீபன் நினைவு ஊர்தி வவுனியாவில் இருந்து புறப்பட்டது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorized

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா மாநகர சபை தேர்தல் முடிவுகள். 

மே 6, 2025
Uncategorized

பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் சடலமாக மீட்பு

ஆகஸ்ட் 20, 2025
Uncategorizedகனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தல் இன்று – 5 தமிழர்கள் போட்டி!

பிப்ரவரி 27, 2025
Uncategorized

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 5 மே 2025

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?