Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

2026 வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் இன்று இடம்பெற்றது!

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் 2026 வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

விசேடமாக, புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில்,வலுசக்தித் துறைக்கு அதிக தேவை இருப்பதாகவும், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறித்த துறை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யும்போது அதிக அளவு வரி செலுத்த வேண்டியிருப்பதால், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலுசக்தித் துறைத் தரப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும்,வலுசக்தி அமைச்சர், அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் வலுசக்தி துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுடனும் விரைவில் மீண்டும் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலுசக்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துதல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் இதற்காக உற்பத்தியாளர்களின் பங்களிப்பைப் பெறுதல் குறித்தும் அதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வலுசக்தித் துறை முதலீட்டாளர்கள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் 15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த குடும்பஸ்தர்.

பிப்ரவரி 18, 2025
இலங்கை

யாழில் மணப்பெண் அலங்கார பயிற்சி…

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல அயதுல்லா அலி கொமெய்னி!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டானில் பனை,தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்….

ஏப்ரல் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?