அமேசன் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,253 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என குளோபல் விட்னஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரேசில், பெரு, ஒலிவியா உட்பட 9 நாடுகளில் பறந்து விரிந்து 70இலட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் அமேசன் காடுகள் உள்ளன.
உலகமயமாக்கல் மற்றும் மனிதர்களின் செயற்பாட்டால் அமேசன் காடுகள் அழிக்கப்படுவதாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இவ்வாறு போராடும் இயற்கை ஆர்வலர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதாக லண்டனை சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012-2024 வரையிலான 12 ஆண்டுகளில் 2253 சுற்றுசூழல் ஆர்வலர்கள் மர்மமாக கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்று வெளியிட்ப்பட்டுள்ளது.