Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்-ட்ரம்ப்!

செப்டம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இரண்டாவது முறையாக ட்ரம்ப் நோ்மறையான கருத்துகளைக் கூறியுள்ளாா்.

இதன்மூலம் இருதரப்பு வா்த்தகப் பதற்றம் தணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப்,

‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகத் தடைகளுக்குத் தீா்வு காண இருதரப்பும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் இந்திய பிரதமா் மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன். வெற்றிகரமான தீா்வை எட்டுவதில் நமது இரு பெரும் நாடுகளுக்கும் எந்தச் சிரமமும் இருக்காது என நிச்சயமாக நம்புகிறேன்’ என்றாா்.

இப்பதிவிற்கு மோடி வரவேற்பு தெரிவித்துள்ளதோடு ட்ரம்ப்பின் பதிவை இணைத்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் பதிவிட்டிருப்பதாவது,

‘இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள்; இயல்பான கூட்டாளிகள். தற்போது நடைபெற்றுவரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை, இருதரப்புக் கூட்டாண்மையின் எல்லையில்லா வல்லமைக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். வா்த்தகப் பேச்சுவாா்த்தையை விரைவில் நிறைவு செய்ய இரு நாடுகளும் செயலாற்றி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் பேச நானும் ஆவலுடன் உள்ளேன். இரு நாட்டு மக்களின் பிரகாசமான, செழிப்பான எதிா்காலத்துக்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேவேளை இந்திய பிரதமரின் இப்பதிவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிா்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கமாண்டோ சலிந்தவுக்கு வெடிமருந்து விற்ற இராணுவ அதிகாரி கைது!
அடுத்த செய்தி காஸா நகரத்தில் இருந்து இரண்டு இலட்சம் மக்கள் வெளியேற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

துருக்கியில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீ!

ஜூலை 1, 2025
உலகம்

பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் தேர்தல் திகதி அறிவிப்பு

ஏப்ரல் 16, 2025
உலகம்

மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?