Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியதாக குற்றசாட்டு!

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர பதவியிலிருக்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை நியாயமாக முன்னெடுக்க முடியுமா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 விசாரணைகளின் போது அருண ஜயசேகர சாட்சியமளித்திருக்கின்றார். அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் சாட்சியளித்திருக்கின்றனர்.

இந்தநிலையில், குறித்த விசாரணைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும் என அவர் நினைத்தால், நிச்சயம் பதவி விலகியிருப்பார் என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அருண ஜயசேகர அதை செய்யாததன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அவருக்கெதிராக அவநம்பிக்கை பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நம்பிக்கையில்லா பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த பக்க சார்பற்ற விசாரணைகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பு!
அடுத்த செய்தி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேறியது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைவிசேட செய்திகள்

கெஹலிய, கையூட்டல் ஆணைக்குழுவால் கைது

மே 7, 2025
இலங்கை

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்!

ஜூன் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள மதுபானசாலை – போராட்டத்தில் பொதுமக்கள்

மே 6, 2026
இலங்கை

இந்திய கடற்படையினரால் திருகோணமலையில் நிவாரணம் வழங்கி வைப்பு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?