Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் கைது

ஜனவரி 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்கு அவரை தேடிச் சென்ற சிறுவர் நன்னடத்தை இல்லம் ஒன்றில் பராமரிப்பில் இருந்து வந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 37 வயதுடைய நண்பியின் தந்தையாரை நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் தாய் தந்தை சிறுமியை விட்டுவிட்டு வேவ்வேறு திருமணங்கள் செய்ததையடுத்து, கைவிடப்பட்ட சிறுமியை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் அவரை பராமரிக்க சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

இதனடிப்படையில் ஏறாவூரிலுள்ள சிறுவர் நன்னடத்தை இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த சிறுமி சம்பவதினமான நேற்று அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிந்தும் பகல் 2.00 மணியாகியும் மீண்டும் இல்லத்துக்கு திரும்பாததையடுத்து நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்றபோது அவர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவரை அந்த பகுதியில் தேடிவந்த நிலையில் அவர் அவரது நண்பியின் வீட்டுக்கு சென்றுள்ளர் என கண்டறிந்த உத்தியோகத்தர்கள் அங்கு சென்றபோது அங்கு சிறுமியின் நண்பி அவரது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளதாகவும் அவரது தந்தையார் தனிமையில் இருந்த நிலையில் நண்பியை தேடி சென்ற சிறுமியை வீட்டினுள் கூட்டிச் சென்று அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட நிலையில் சிறுமியை அங்கிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த நண்பியின் 37 வயதுடைய கூலி தொழிலாளியான தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அடுத்த செய்தி யாழ் பல்கலையில் தொடரும் போராட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலையில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்டெடுப்பு!

டிசம்பர் 3, 2025
இலங்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பண்டல்கள் பறிமுதல்!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானில் 26 நாட்களாக இணையத் தடை

மார்ச் 25, 2026
இலங்கை

ஊடகவியலாளர் குமணனிடம் நான்கரை மணித்தியாலங்களுக்கு மேலாக தொடரும் விசாரணை

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?